முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2018 ஐ.பி.எல். ஏலம்: பென் ஸ்டோக்ஸ்க்கு ரூ.12.5 கோடி

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ராஜஸ்தான் ராயல்ஸ் 12.5 கோடி ரூபாய் கொடுத்து பென் ஸ்டோக்ஸ்-ஐ வாங்கியுள்ளது. மிட்செல் ஸ்டார்க்-ஐ 9.4 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.

578 வீரர்கள் ...
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ம் தேதி முதல் மே 27-ம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வந்துள்ளனர். ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்றும் (சனிக்கிழமை), நாளையும் நடக்கிறது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும். நேற்றைய முதல் நாள் ஏலம் நடைபெற்று வருகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை எடுக்க ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 12.5 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. கடந்த முறை 14.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்ஆப்பிரிக்கா அணி கேப்டன் டு பிளிசிஸ்-ஐ 1.6 கோடி ரூபாய் கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. ஆனால் ஆர்டிஎம் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துக் கொண்டது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்-ஐ எடுக்க பஞ்சாப், கொல்கத்தா அணி இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் கொல்கத்தா 9.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அதிரடி மன்னன் கிறிஸ் கெயல் ஏலம் போகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து