முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2015-ல் ரூ.16 கோடி ஏலம் போன யுவராஜ் சிங்கை பஞ்சாப் அணி ரூ.2 கோடிக்கு வாங்கியது

சனிக்கிழமை, 27 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

பெங்களூரு: யுவராஜ் சிங்கை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலைக்கே வாங்கியது.

பெரும் சாதனை
11-வது ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. வரையறுக்கப்பட்ட ஓவர்களில் விளையாடும் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறாத கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலையிலே ஏலம் எடுக்கப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு ஏலம் நடைபெற்ற போது யுவராஜ் சிங் ரூ.16 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது பெரும் சாதனையானது. உலக கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற அவரை இப்போது நிர்ணயம் செய்யப்பட்ட அடிப்படை விலையான ரூ. 2 கோடியில் பஞ்சாப் அணி ஏலம் எடுத்தது.

காம்பீர் ரூ.2.80 கோடி...
யுவராஜ் சிங்கை எந்தஒரு அணியும் ஏலம் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. இதேபோன்றுதான் கவுதம் காம்பீர் நிலையும் கொல்கத்தா அணியில் அவர் இடம்பெறவில்லை. டெல்லி அணி அவரை ரூ. 2.80 கோடிக்கு ஏலம் எடுத்து உள்ளது. பஞ்சாப் அணி அவரை ரூ. 2.60 கோடி வரையில் போட்டி ஏலம் கேட்டது. அதன்பின்னர் நிறுத்திக்கொண்டது. இதனையடுத்து அவர் டெல்லி அணிக்கு மீண்டும் திரும்பிஉள்ளார். யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்கு திரும்பியது தொடர்பாக டுவிட்டரில் கருத்து பதிவு செய்து உள்ள நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஆம்! யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்கு திரும்பிஉள்ளார், இதைவிட பெரிய மகிழ்ச்சி கிடையாது என கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து