முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நுண்ணறிவில் விஞ்ஞானி ஐன்ஸ்டீனை விட அதிக மதிப்பெண் பெற்ற இந்திய சிறுவன்

ஞாயிற்றுக்கிழமை, 28 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: பிரிட்டனை தலைமையிடமாக கொண்ட மென்ஸா அமைப்பு, மொழித் திறன், பொது அறிவு, நினைவுத் திறன், கணிதத் திறன், சிக்கலுக்குத் தீர்வு காணும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நுண்ணறிவுத் திறன் தேர்வை நடத்தி வருகிறது. இதில் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் 160 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தனர்.

மென்ஸா அமைப்பு அண்மையில் நடத்திய தேர்வில் பிரிட்டனின் தென்கிழக்குப் பகுதியான வோகிங்ஹாம் நகரைச் சேர்ந்த இந்திய வம்சாவளி சிறுவன் மெகுல் கார்க் 162 மதிப்பெண்கள் பெற்று புதிய சாதனை படைத்துள்ளார்.

அவரது தாயார் திவ்யா கூறியபோது, “கடந்த ஆண்டு எனது மூத்த மகன் துருவ் கார்க் (13) மென்ஸா போட்டியில் 162 மதிப்பெண்கள் பெற்றான். அண்ணனை பின்பற்றி தம்பியும் இந்த ஆண்டு 162 மதிப்பெண்களை பெற்றுள்ளான்” என்று தெரிவித்தார். மெகுலின் தந்தை கவுரவ் கார்க் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து பிரிட்டனில் குடியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து