முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உதவியாளர்களை வைத்து கொள்வதில்லை நானேதான் ட்வீட் செய்கிறேன்: அதிபர் டிரம்ப்

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நான் பெரும்பாலும் ட்வீட் செய்வதற்கு உதவியாளர்களை வைத்து கொள்வதில்லை. நானேதான் ட்வீட் செய்கிறேன். சில சமயங்களில் படுகையிலிருந்துகூட ட்வீட் செய்வேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

லண்டனை தலையிடமாகக் கொண்ட தொலைக்காட்சியின் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற டிரம்ப்பிடம் ட்விட்டரில் அவரது ட்வீட்கள் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு சுவாரசியமான பதிலை டிரம்ப் தெரிவித்தார்.

 அதிபர் டிரம்ப் கூறியதாவது, ”என்னை பற்றி நிறைய பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன. அவற்றுக்கு ட்விட்டர் வாயிலாக பதிலளிக்க முடியாவிட்டால் எனது தரப்பு நியாயத்தை கூற முடியாமல் போகிவிடும். உலகின் பல மக்கள் என்னுடைய ட்வீட்டுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நான் பெரும்பாலும் ட்வீட் செய்வதற்கு உதவியாளர்களை வைத்துக் கொள்வதில்லை. நானேதான் ட்வீட் செய்கிறேன். சில சமயங்களில் படுகையிலிருந்துகூட ட்வீட் செய்வேன். சில நேரங்களில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ட்வீட் செய்வேன்.

பெரும்பாலும் நான் அதிகாலை வேளைகளில்தான் ட்வீட் செய்கிறேன்" என்றார்.

ட்விட்டர் வாசிகளால் அதிகம் கவனிக்கப்படும் நபராக அமெரிக்க அதிபர் உள்ளார். டொனால்ட் டிரம்ப் -47 .2 மில்லியன் பின் தொடர்பாளர்களும், பிரசிடெண்ட் டிரம்ப்- 22 மில்லியன் பின் தொடர்பாளர்கள் என்று இரு ட்விட்டர் கணக்குகள் டிரம்ப் கொண்டுள்ளார். இரண்டையும் சேர்ந்து 69 மில்லியன் ட்விட்டர் வாசிகள் டிரம்பை பின் தொடர்கிறார்கள்.

வடகொரியா, மெக்சிகோவை விமர்சித்து டிரம்ப் பதிவிட்ட பல சர்ச்சை மிகுந்த ட்வீட்கள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து