முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மரம்,குருவிக்கூடு, அருவி என அலுவலகத்திற்குள் காட்டை உருவாக்கிய அமேசான் நிறுவனம்

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

 நியுயார்க்,  புதிதாக அலுவலகம் கட்டுவதுதான் இப்போது டிரெண்ட் ஆகி இருக்கிறது. மைக்ரோசாப்ட், பேஸ்புக், ஆப்பிள் என அனைத்து நிறுவனங்களும் புதிதாக அலுவலகம் கட்டிவருகிறது. இந்த கோதாவில் சில வருடங்களுக்கு முன்பே அமேசான் நிறுவனமும் இணைந்துவிட்டது.

எல்லா நிறுவனத்தை போலவே இதுவும் வித்தியாசமாக அலுவலகத்தை கட்ட விரும்பி இருக்கிறது. அந்த வகையில் தற்போது அமேசான் அலுவலகத்தில் சிறிய அமேசான் காடு உருவாக்கப்பட்டு இருக்கிறது. நிறைய மரங்களை நட்டு இருக்கிறது.

 இந்த அலுவலகத்தில் மொத்தம் மூன்று குருவிக்கூடு போன்ற கூடு இருக்கும். ஒவ்வொரு கூட்டுக்குள் 800 பேர் வரை இருக்க முடியும். இதற்குள் பெரிய பெரிய மரங்கள் வளர்க்கப்பட்டு இருக்கும். ஆங்காகே சிறு சிறு அருவிகள் என ஒரு காட்டுக்குள் இருக்கும் உணர்வை கொடுக்கும்.இந்த பணிக்காக மொத்தம் 600 பேர் பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். உலகத்தில் இருந்து சில முக்கியமான படங்களின் ஆர்ட் டைரக்டர்கள் இந்த பணிக்காக வரவழைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் கடந்த மூன்று வருடமாக அந்த அலுவலகத்தை கொஞ்சமா கொஞ்சமாக செதுக்கி இருக்கிறார்கள்.

 ஆனால் இந்த மரம் வளர 5 வருடம் ஆகும். இதற்காக நிறைய அறிவியலார்களை கூப்பிட்டு தற்போது அங்கு வளர்ந்த மரம் ஒன்றை அப்படியே நட்டு இருக்கிறார்கள். அங்கு தற்போது 5 க்கும் அதிகமாக பெரிய பெரிய மரங்கள் நடப்பட்டு இருக்கிறது. வேலை பணியில் இருக்கும் நபர்கள் ஒய்வு எடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வேலை சரியாக நடக்க வேண்டும் என்பதால் எல்லோருக்கும் இவ்வளவு நேரம் தான் இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கேயே இருந்து வேலை பார்க்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து