முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமநாதபுரத்தில் கச்சத்தீவு திருவிழா ஆலோசணை கூட்டம்

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      ராமநாதபுரம்
Image Unavailable

 ராமநாதபுரம்-ரா மநாதரபுரத்தில் கச்சத்தீவு விழா தொடர்பான ஆலோசணை கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.
 ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர்  முனைவர்.ச.நடராஜன்; தலைமையில், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில்  வருகின்ற 23.02.2018 மற்றும் 24.02.2018 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லவுள்ள யாத்திரிகர்களை பாதுகாப்பாக அனுப்பி திரும்ப அழைத்து வருதல் தொடர்பான ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா  முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-  கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயத்தில்  வருகின்ற 23.02.2018 மற்றும் 24.02.2018 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ள திருவிழாவில் கலந்து கொள்வதற்காக செல்லும் யாத்திரிகர்கள் அனைவரும், கச்சத்தீவு யாத்திரைக்கான ஒருங்கிணைப்பாளரின் தலைமையின் கீழ் மட்டுமே செல்ல அனுமதி உண்டு.  அதேவேளையில் ஒருங்கிணைப்பாளர் யாத்திரிகர்கள் மற்றும் படகுகள் குறித்த அனைத்து விபரங்களையும் உரிய ஆதாரத்துடன் 01.02.2018க்குள் மாவட்ட நிர்வாகத்திடம் அளித்திட  வேண்டும்.  மேலும் அரசு அறிவுறுத்தலின்படி, யாத்திரிகர்கள் மீன்பிடி விசைப்படகுகளின் மூலமாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.  மேலும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் இருந்து கச்சத்தீவு விழாவிற்கு செல்ல விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திலிருந்து தடையின்மைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பாலித்தீன் பொருட்கள், கத்தி, அரிவாள் போன்ற பொருட்களையும், விலங்குகள், மருந்து பொருட்கள், பழங்கள், மரங்கள், மரக்கட்டைகள் போன்றவற்றையும் படகுகளில் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை.
 கச்சத்தீவு யாத்திரிகைக்காக பயன்படுத்தப்படவுள்ள படகுகளின் உரிமம் மற்றும் காப்பீடு குறித்த விபரங்களை மீன்வளத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்து உறுதி செய்திட வேண்டும்.  அவசர சூழ்நிலையினை ஏதுவாக யாத்திரிகர்கள் கிளம்பும் இடத்தில் மருத்துவ குழுவினர் தயார் நிலையில் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  யாத்திரிகர்கள் செல்லும் ஒவ்வொரு படகிலும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டுமே யாத்திரிகர்கள் செல்வதை உறுதி செய்திட வேண்டும்.  இதுதவிர யாத்திரிகைக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காவல்துறை, இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் சுங்கத் துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, கடலோர பாதுகாப்பு காவல் கண்காணிப்பாளர் டி.அசோக்குமார், பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணுசந்திரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) மரு.பி.முல்லைக்கொடி, துணை இயக்குநர் (மருத்துவ பணிகள்) மரு.குமரகுருபரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ.அண்ணாதுரை, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆ.செல்லத்துரை, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் கோபிநாத், சிவக்குமார்  உள்பட அரசு அலுவலர்கள், கச்சத்தீவு யாத்திரைக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து