திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அங்கன்வாடி மையங்களை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      மதுரை
29 governer

 மதுரை.- மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், நாகமலை புதுக்கோட்டை ஊராட்சி, ஆழ்வார்நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தினை   தமிழ்நாடு ஆளுநர்  பன்வாரிலால் புரோகித்    பார்வையிட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவினை வழங்கினார்.  பின்னர் ஆழ்வார்நகரில் அமைக்கப்பட்ட புகைப்படக்கண்காட்சியையும், மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த மாதிரி விளக்கத்தினையும், மகளிர் சுயஉதவிக்குழுவினரால் தயாரிக்கப்பட்ட கைவினைப்பொருட்களையும், பார்வையிட்டார்.  மேலும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பொது மக்களிடையே தூய்மையின் முக்கியத்துவத்தினை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த தூய்மை ரதத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 அதனைத்தொடர்ந்து   தமிழ்நாடு ஆளுநர்  மதுரை காந்தி அருங்காட்சியகத்திலுள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தி, அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.  பின்னர் மதுரை அரசினர் விருந்தினர் மாளிகையில் மதுரை மாவட்டம் குறித்த விளக்க தொகுப்பினை   தமிழ்நாடு ஆளுநர்  பார்வையிட்டார்.
 தொடர்ந்து மதுரை அரசு விருந்தினர் மாளிகையில்   தமிழ்நாடு ஆளுநர்  மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகளிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
   தமிழ்நாடு ஆளுநர்  மதுரை தெற்கு வெளிவீதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணியினை மேற்கொண்டு, பொதுமக்களிடையே தூய்மையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தினார்.  பின்னர் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தூய்மையின் முக்கியத்துவம் குறித்த உறுதிமொழியினை   தமிழ்நாடு ஆளுநர்  தலைமையில் எடுத்துக்கொண்டனர்.
 பின்னர்   தமிழ்நாடு ஆளுநர் , பயன்பாட்டில் இருந்து வரும் மின்னணு முறை கழிப்பிட வசதி குறித்தும், காசு மூலம் தானாக இயங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திர வசதி குறித்தும் பார்வையிட்டு மின்கலம் மூலம் இயக்கப்படும் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.  பின்னர் மேலமாசி வீதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவகத்தை பார்வையிட்டார். 
 இந்நிகழ்ச்சியில்   ஆளுநரின் கூடுதல் தலைமைச்செயலாளர்  ஆர்.ராஜகோபால்,  மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்               கொ.வீர ராகவ ராவ்,  மாநகர காவல்துறை ஆணையர்  மகேஷ்குமார் அகர்வால், மதுரை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர்.அனீஷ்சேகர், மாவட்ட வன அலுவலர்  ஜெ.ஆர்.சமர்த்தா, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.மணிவண்ணன், உதவி ஆட்சியர் (பயிற்சி)  ரஞ்சித்சிங், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து