ரூ.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      மதுரை
29 ymm newws

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் சிறப்பு மக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் பல்வேறு கிராமங்களில் சிறப்பாக நடைபெற்றது. இந்த முகாம்களில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டதுடன் ரூ.23லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.இந்த முகாம்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் குணாளன் தலைமை வகித்தார்.உசிலை கோட்டாட்சியர் சுகன்யா முன்னிலை வகித்தார்.பேரையூர் வட்டாட்சியர் உதயசங்கர் வரவேற்று பேசினார்.இதில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை  அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்று சிறப்புரையாற்றினார்.அப்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது:
அம்மா தொகுத்து கொடுத்த திட்டங்களை நூற்றுக்கு நூறு சதவீதம் நிறைவேற்றும் வகையில் தற்போது பல்வேறு நலதிட்டங்களை அம்மாவின் அரசு செயல்படுத்தி வருகிறது.தற்போது திருமங்கலம் தொகுதி முழுவதும் கிராமம் கிராமமாக மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் அமைத்து மாவட்ட ஆட்சியரே நேரடியாக வந்து மனுக்களுக்கு தீர்வு கொடுக்கிற ஒரே அரசு அம்மாவின் அரசு மட்டும் தான்.இந்தியாவிலே முதன் முறையாக வருவாய்கிராமங்களுக்கு வட்டாச்சியர் அலுவலக அதிகாரிகள் நேரடியாக சென்று 50லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட வரலாறு படைத்த ஒரே அரசு அம்மாவின் அரசு.தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றிட பணிகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அம்மா அறிவித்த தேர்தல் வாக்குறுதியான பெண்களுக்கு இருசக்கரவாகன மானிய திட்டத்திற்கு ரூ200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் அம்மா பிறந்த நாளான பிப்ரவரி 24ந்தேதி உழைக்கும் பெண்களுக்கு முதலமைச்சர் எடப்பாடியார் வழங்க உள்ளார்.என்று பேசினார்.
பின்னர் டி.கல்லுப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியபூலாம்பட்டி சின்னபூலாம்பட்டி தொட்டியபட்டி கிளாங்குளம் ஆகிய கிராமங்களில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் 500க்கும் மேற்பட்ட மனுக்களை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெற்றுக்கொண்டதுடன் பயனாளிகள் 145பேருக்கு மாற்றுதிறனாளிகளுக்கான சக்கரவண்டி மற்றும் உதவிதொகை,கல்விஉதவிதொகை,தாலிக்கு தங்கம் முதியோர் உதவிதொகை,டிராக்டர் டிரில்லர் உள்ளிட்ட ரூ.23 லட்சம் மதிப்பீட்டிலான நலதிட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் மதுரை புறநகர் மாவட்ட கழக துணைசெயலாளர் அய்யப்பன்,மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் திருப்பதி,டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகச் செயலாளர் ராமசாமி,முன்னாள் டி.கல்லுப்பட்டி யூனியன் துணை சேர்மன் பாவடியான், திருமங்கலம் ஒன்றிய செயலாளர் வக்கீல்.அன்பழகன்,கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் மகாலிங்கம்,பேரூர் கழகச் செயலாளர்கள் பாலசுப்பிரமணியன்,நெடுமாறன் மற்றும் நிர்வாகிகள் மாணிக்கம்,பாஸ்கரன்,பழனிச்செல்வி ராமகிருஷ்ணன்,நாகலட்சுமி,மீனாலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து