அ.தி.மு.க. உறுப்பினர் சேர்த்தல் - புதுப்பித்தல் பணி: சென்னையில் இ.பி.எஸ்.,ஓ.பி.எஸ். துவக்கி வைத்தனர்

திங்கட்கிழமை, 29 ஜனவரி 2018      தமிழகம்
EPS-OPS 2018 01 29

Source: provided

சென்னை : அ.தி.மு.க. உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணியை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். ஜெயலலிதா பேரவை சார்பில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உறுப்பினர் சேர்த்தல் படிவங்களை பெற்றுக்கொண்டார்.

பணி தொடங்கியது

அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான, உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்கள்’ வழங்கும் பணி துவக்கம் சென்னை ராயப்பேட்டையில் அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் நேற்று காலை துவங்கியது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமைக் கழகத்தில் நேற்று காலை அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்குமான, உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை வழங்கி, இப்பணியை துவக்கி வைத்தனர். இதில் ஜெயலலிதா பேரவை சார்பில் அதன் மாநில செயலாளரும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று அ.தி.மு.க. உறுப்பினர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டார்.


விண்ணப்ப படிவம்...

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. நிர்வாகிகளும், அமைச்சர்களும் அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை பெற்றுச் சென்றனர்.

நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, செங்கோட்டையன், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, துரைக்கண்ணு, விஜயபாஸ்கர், காமராஜ், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் தமிழ்மகன்உசேன், அமைப்பு செயலாளர் செம்மலை, மாவட்ட செயலாளர்கள் வாலாஜா கணேசன், சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், விழுப்புரம் மாவட்ட செயலாளரும் எம்.பி.யுமான லட்சுமணன்,  ஜெ.,பேரவை மாவட்ட செயலாளர்கள் சேலம் இளங்கோவன், வடசென்னை ஆர்.எஸ்.ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து