முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், தான் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம் என்றும், தான் ஒரு பெண்ணியவாதி கிடையாது என்றும் லண்டனைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

லண்டனை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடிவி தொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் பல சுவாரஸ்யமான பதில்களை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரிஸ் மோர்கனுக்கு அளித்திருக்கிறார்.

இங்கிலாந்து மக்களிடையே டிரம்ப்பின் புகழ் குறித்த கேள்விக்கு, “நான் உங்கள் நாட்டில் மிகப் பிரபலமாக இருக்கிறேன் என்று நினைக்கிறேன். எனக்கு நிறைய இமெயில்கள் உங்கள் நாட்டிலிருந்து வருகின்றன.
எனது நாட்டைப் பற்றிய என்னுடைய பாதுகாப்பு உணர்வு அவர்களுக்கு பிடித்திருக்கிறது. பல்வேறு துறைகளைப் பற்றிய என்னுடைய கருத்துகளை அவர்கள் விரும்புகிறார்கள். எங்களுக்கு இங்கிலாந்து மக்களிடமிருந்து சிறப்பான ஆதரவு கிடைத்திருக்கிறது” என்றார்.

நீங்கள் ஒரு பெண்ணியவாதியா என்று தொகுப்பாளர் கேட்க, “இல்லை. நான் அவ்வாறு கூற மாட்டேன். நான் என்ன கூற வருகிறேன் என்றால், நான் பெண்களுக்காகவும் இருக்கிறேன். ஆண்களுக்காகவும் இருக்கிறேன். நான் எல்லாருக்காகவும் இருக்கிறேன்” என்று டிரம்ப் பதிலளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து