ரஜினி காட்டும் முத்திரை ஆட்டுத்தலை பாபா முத்திரை அல்ல: சரத்குமார் தாக்கு

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      தமிழகம்
Sarath-Kumar 2017 03 02

சென்னை: காவிரி பிரச்சினையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும் என்று சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

காவிரி பிரச்சனையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். அவர் காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல, ஆட்டுத் தலை.
- சரத்குமார்

சென்னை சேப்பாக்கத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொள்ள அதன் தலைவர் சரத்குமார் சைக்கிளில் பயணம் மேற்கொண்டு போராட்ட மேடைக்கு வந்தார். அப்போது ரஜினி குறித்து அவர் கூறுகையில், காவிரி பிரச்சனையில் ரஜினியின் நிலைப்பாடு என்ன என்பதை அவர் விளக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டு அமெரிக்கா சென்றவர் ரஜினி. அவர் காட்டும் முத்திரை பாபா முத்திரை அல்ல, ஆட்டுத் தலை என்று ஆவேசமாக பேசினார் சரத்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து