முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை: லாராவை முந்தினார், விராட்கோலி

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

துபாய் : டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் 912 புள்ளிகளை குவித்துள்ள இந்திய அணி கேப்டன் விராட்கோலி, லாராவை பின்னுக்கு தள்ளி 26-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.

சிறந்த கிரிக்கெட் வீரர்

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியின் முடிவில் ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டியில் பேட்ஸ்மேன் தரவரிசையில் அதிக புள்ளி குவித்தவர்களின் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது. இதன்படி, 2017-ம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட விராட்கோலி மற்றொரு மைல்கல்லை எட்டி இருக்கிறார்.

கூடுதலாக 12 புள்ளிகள்

கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட்கோலி முதல் இன்னிங்சில் 54 ரன்னும், 2-வது இன்னிங்சில் 41 ரன்னும் எடுத்தார். இதன் மூலம் அவருக்கு கூடுதலாக 12 புள்ளிகள் கிடைத்தன. இதன் மூலம் 900 புள்ளியில் இருந்த விராட்கோலி 912 புள்ளிகளை எட்டி உள்ளார். இதனால் ஒட்டுமொத்த டெஸ்ட் போட்டியில் 900 புள்ளிகளுக்கு மேல் குவித்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் 31-வது இடத்தில் இருந்த விராட்கோலி 26-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முன்னேற்றம்...

விராட்கோலி வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் லாரா (911 புள்ளிகள்), இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் (909 புள்ளிகள்), தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா (907 புள்ளிகள்), வெஸ்ட்இண்டீசின் சந்தர்பால் (901 புள்ளிகள்), ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் (900 புள்ளிகள்) ஆகியோரை ஒரேநேரத்தில் பின்னுக்கு தள்ளி இந்த முன்னேற்றத்தை கண்டுள்ளார்.

5 புள்ளிகள் மட்டுமே...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் 916 புள்ளிகளுடன் 23-வது இடத்தில் இருக்கிறார். அவரை முந்த விராட்கோலிக்கு இன்னும் 5 புள்ளிகள் மட்டுமே தேவையாகும். ஜூன் மாதம் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே ஒரு டெஸ்ட் மற்றும் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விராட்கோலி, கவாஸ்கரை முந்த வாய்ப்பு உள்ளது.

பிராட்மேன் முதலிடத்தில்...

டெஸ்ட் பேட்ஸ்மேன் ஒட்டுமொத்த தரவரிசையில் ஆஸ்திரேலிய சகாப்தம் டான் பிராட்மேன் 961 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் சுமித் (947 புள்ளிகள்) உள்ளார். இங்கிலாந்து முன்னாள் வீரர் லெனார்ட் ஹூட்டன் (945 புள்ளிகள்) 3-வது இடத்திலும், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் (942 புள்ளிகள்) 4-வது இடத்திலும், இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜாக் ஹோப்ஸ் (942 புள்ளிகள்) 5-வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து