ஆணையாளர் அனீஸ்சேகர் தலைமையில் மதுரை மாநகராட்சியில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      மதுரை
30 mdu news

மதுரை-மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் மகாத்மா காந்தியடிகள் அவர்களின் நினைவு நாளினை முன்னிட்டு தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும் உறுதிமொழியும் மற்றும் தேசிய தொழுநோய் எதிர்ப்பு நாள்  உறுதிமொழியும் ஆணையாளர்     உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
தீண்டாமை ஒழிக்க மேற்கொள்ளப்பட்ட உறுதிமொழி:
இந்திய அரசியலமைப்பின்பால் இடைவிடாத, உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்   குடிமகள் ஆகிய நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்;தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம் வாக்கு செயல் என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படைக் கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின்பால் எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும் எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார உறுதியளிக்கிறேன் என உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. முன்னதாக இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதேபோல் அனைத்து மண்டல அலுவலங்களிலும் உதவி ஆணையாளர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.
தேசிய தொழுநோய் எதிர்ப்பு நாள் உறுதிமொழி
மகாத்மா காந்தி நினைவு தினமாக இன்று உறுதி மொழி ஏற்கிறேன். என்னவெனில் உணர்ச்சியற்ற தேமல் அல்லது படை போன்றோ தொழுநோயினால் உடன் குறைபாடு உள்ளவர்களை எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகில் உள்ளவர்களோ, சமூகத்திலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவ மனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்வேன்.  அவர்களை அன்பாகவும், எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதைவுடன் நடத்துவேன். தொழுநோய் குணமாக கூடியது ஆரம்ப நிலைய சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாது அங்கஹீனத்தை தடுக்கும் தொழுநோயாளிகளை ஒதுக்க்ககூடாது போன்ற விபரங்களை ஊர் முழுவதும் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன். மகாத்மாவின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லா இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.
இந்நிகழ்;ச்சியில்  மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து