ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கு

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      விருதுநகர்
30 ramgo news

ராஜபாளையம் - ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.கருத்தரங்கிற்கு ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர்.வெங்கட்ராமராஜா தலைமை வகித்து அனைவரையும் வரவேற்று பேசினார்.அவரது துணைவியார் நிர்மலா வெங்கட்ராமராஜா, நகராட்சி ஆணையாளர் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.சிறப்பு அழைப்பாளராக ஜெர்மனியைச் சேர்ந்த லூகாஸ்  டெங்க் பவர் பாய்ண்ட் நிகழ்ச்சி மூலமாக உலகில் பல்வேறு பகுதிகள் மற்றும் இந்தியாவில் திடக்கழிவினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து புள்ளி விவரங்களை படங்களுடன் வெண் திரை மூலமாக லூகாஸ் டெங்க் விளக்கவுரயாற்றினார்.இதன் மூலம் நகராட்சி நிர்வாகிகள் திடக்கழிவுகளை அகற்றி செயல்படும் விதங்களை நகர மக்கள், வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு பயன்பெறும் வண்ணம் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.முடிவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் தாமிரபரணி கூட்டக்குடிநீர் திட்ட செயல் வடிவத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் விளக்கவுரையாறற்pனார்.தொழில்வர்த்தக சங்க செயலாளர் நாராயணசாமி முடிவில் நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து