முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்ஆப்பிரிக்கா தொடர் கடும் சவாலாக இருக்கும் - ஆஸி. கேப்டன் ஸ்மித் கருத்து

செவ்வாய்க்கிழமை, 30 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

சிட்னி : தென்ஆப்பிரிக்கா தொடர் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் குறிப்பிட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சுக்கு...

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் முடிவடைந்துள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா 2-1 எனத் தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் ஆடுகளம் தயாரிக்கப்பட்டது. பேட்ஸ்மேன்கள் திணற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. விராட் கோலியைத் தவிர எந்த பேட்ஸ்மேனும் சதம் அடிக்கவில்லை.

டெஸ்ட் தொடர்...

இரு அணி பந்து வீச்சாளர்களும் எளிதாக 120 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்கள். கடைசி டெஸ்ட் நடைபெற்ற ஜோகன்னஸ்பர்க் ஆடுகளத்தில் பந்து வழக்கத்திற்கு மாறாக திடீர் திடீரென எதிர்பாராத வகையில் பவுன்சராக எகிறியது. இதனால் பேட்ஸ்மேன்கள் அடிவாங்கும் நிலை ஏற்பட்டது. இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான ஒருநாள் மற்றும் டி20 தொடர் முடிந்தவுடன் ஆஸ்திரேலியா தென்ஆப்பிரிக்கா செல்கிறது. அப்போது நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

கடும் சவாலாக...

முதல் டெஸ்ட் டர்பனில் மார்ச் 1-ந்தேதி தொடங்குகிறது. அதன்பின் 2-வது டெஸ்ட் மார்ச் 9-ந்தேதி போர்ட் எலிசபெத்திலும், 3-வது டெஸ்ட் மார்ச் 22-ந்தேதி கேப் டவுனிலும், 4-வது டெஸ்ட் மார்ச் 30-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கிலும் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும் என அந்த அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

கடுமையாக போராட...

இதுகுறித்து ஸ்மித் கூறுகையில் ‘‘இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடரை சிறிது நேரம் பார்த்தேன். ஆஸ்திரேலியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான தொடர் உண்மையிலேயே பரபரப்பானதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இரண்டு வேகப்பந்து அணி களம் இறங்க இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கும். தென்ஆப்பிரிக்காவில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்களை எதிர்த்து நாங்கள் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். வேகப்பந்து வீச்சுடன் கேஷவ் மகாராஜ் சிறந்த சுழற்பந்து வீச்சாளராகவும் உள்ளார்.

ஒரே மாதிரியாக ...

தென்ஆப்பிரிக்கா ஆடுகளத்தோடு அவர்கள் இரண்டு மாறுபட்ட வழிகளோடு களம் இறங்குவார்கள். அவர்கள் எப்படிப்பட்ட ஆடுகளத்தை தயார் செய்தாலும் அதற்கு ஏற்றபடி எங்களை மாற்றிக் கொள்வோம். தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா இரு நாடுகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான சூழ்நிலையை கொண்டவை. ஆடுகளம் வேகப்பந்து வீச்சும் மற்றும் பவுன்சர் ஒரே மாதிரியாக இருக்கும்’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து