முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு சுற்றுலாவுக்கான விவசாயிகள் பட்டியலில் முறைகேடு பா.ஜ.க. மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

போபால்: வெளிநாட்டில் பயிற்சி சுற்றுலா மேற்கொள்வதற்கான விவசாயிகள் பட்டியலில் பாரதீய ஜனதா முறைகேடு செய்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது.

தற்கொலை அதிகரிப்பு...
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்து உள்ளது.  கடந்த 2014ம் ஆண்டில் 826 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2015ம் ஆண்டில் 1,290 ஆக உயர்ந்தது. இது கடந்த 2016 பிப்ரவரி 1ல் இருந்து 2017 பிப்ரவரி வரையிலான ஆண்டில் 1,982 ஆக அதிகரித்துள்ளது.  2017ம் ஆண்டு கணக்கின்படி கடந்த 9 ஆண்டுகளில் 11 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர் என தேசிய குற்ற ஆவண பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

சுற்றுலா அழைத்து...
இதனால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளாமல் அவர்களை தடுக்கும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதனை அடுத்து விவசாயிகளை தேர்வு செய்து அவர்களை வெளிநாட்டிற்கு பயிற்சிக்காக சுற்றுலா அழைத்து செல்வது என ஆளும் பாரதீய ஜனதா அரசு முடிவு செய்தது.  விண்ணப்பங்களை ஆன்லைனில் அனுப்பி விவசாயிகளுக்கு அறிவிப்பும் செய்தது.

30 விவசாயிகள் தேர்வு
இதுவரை நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு செல்வதற்காக 30 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு செல்வதற்காக 18 விவசாயிகளே விண்ணப்பித்துள்ளனர்.  இதுபோன்ற திட்டங்களால் விவசாயிகள் பெருமளவில் பலனடைவர் என மத்திய பிரதேச தோட்ட கலை மந்திரி மீனா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் குற்றச்சாட்டு
ஆனால், விவசாயிகளின் பெயர் பட்டியலில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பு அதிகாரி கே.கே. மிஷ்ரா கூறியுள்ளார்.  அவர், விவசாயிகளுக்கான நிதியை பயன்படுத்தி இவர்கள் அனைவரும் வெளிநாட்டு சுற்றுலா செல்கின்றனர்.  முதல் மந்திரி என்ன செய்து கொண்டு இருக்கிறார்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து