முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா-பாகிஸ்தான் இடையே மீண்டும் ரெயில் போக்குவரத்து

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

இஸ்லாமாபாத், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மீண்டும் 3 ஆண்டுகளுக்கு ரெயில் போக்கு வரத்து நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

எல்லையில் பதட்டம்

காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பதட்டம் நிலவுகிறது. இந்த நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையே தொடர்ந்து ரெயில் போக்கு வரத்து நடைபெற ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தியாவின் முனாயயோவில் இருந்து பாகிஸ்தான் கோக்ராபருக்கு ரெயில் போக்குவரத்து நடை பெறுகிறது.

நல்லுறவை ஏற்படுத்த...

இதன்மூலம் பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் தென் பகுதியும், இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் இடையே ரெயில் இயக்கப்படும். இருநாட்டு மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்தவும், மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2006-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக இங்கு ரெயில் போக்கு வரத்து நடைபெற்று வருகிறது. தற்போது மீண்டும் 3 ஆண்டுகளுக்கு நீடித்து இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இன்று முதல் வருகிற 2021-ம் ஆண்டு ஜனவரி 31-ந்தேதி வரை இந்த ஒப்பந்தம் அமலில் இருக்கும். இத்தகவலை பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் முகமதுபைசல் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து