முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷில்லாங்கில் இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியின் சூட்-பூட் உடை ரூ.70,000?

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

ஷில்லாங், ஷில்லாங்கில் நடைபெற்ற இசைநிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தியின் உடை ரூ. 70,000 என்று பாஜக கேள்வி எழுப்பி உள்ளது.

ராகுல் பிரசாரம்

60 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் அடுத்த மாதம் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.  ஆளுங்கட்சியான காங்கிரஸ்  ஆட்சியை தக்கவைப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது.  இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அங்கு பிரசாரத்தை தொடங்கினார். வாக்காளர்களை கவர்ந்து இழுக்க காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதி தொடர்பான இசை நிகழ்சி ஷில்லாங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி நீல நிற பேண்டும், கடுங்குளிரை தாங்கும் கருப்பு நிற ஜாக்கெட்டும் அணிருந்தார்.

பா.ஜ.க. கேள்வி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் உடை தொடர்பாக பாஜக ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி புகைப்படத்துடன் கூடிய கருத்து பதிவிடப்பட்டுள்ளது. அதில் அரசின் கருவூலத்தை உறிஞ்சி அதன் மூலம் பெரும் ஊழல் செய்ததால் கிடைத்த கருப்பு பணத்தில் இந்த சூட்-பூட்டை ராகுல் காந்தி அணிந்துள்ளாரா? எங்களின் குறைகளை கூறுவதற்கு முன் மேகலயாவில் உங்கள் கட்சி தலைமையிலான திறனற்ற ஆட்சி செயல்பாடு மற்றும் உங்களின் முரண்பாடான செயல்பாடுகள் குறித்து தகவல் கொடுக்கலாம் என குறிப்பிடபட்டுள்ளது.

ராகுல் காந்தி அணிந்து இருந்த உடை கடுங் குளிரையும் தாங்கக் கூடியது.  இந்த ஜாக்கெட், சொகுசு உடைகளை விற்பனை செய்யும் பிரிஷ்டிஷின் பர்பெர்ரி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்த ஜாக்கெட்டின் விலை ரூ.68,145 என பூமிங்டேல்ஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து