முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - தென்ஆப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      விளையாட்டு
Image Unavailable

டர்பன் : இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி டர்பன் மைதானத்தில் இன்று நடக்கிறது.

டர்பன் மைதானத்தில்...

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் கொண்ட தொடரை இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்து இந்திய அணி 6 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி டர்பன் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

தரவரிசையில் முதல் இடம்

முதல் 2 டெஸ்டில் மோசமாக ஆடி தோற்ற இந்திய அணி ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் அபாரமாக செயல்பட்டது. இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. இதேபோல ஒருநாள் தொடரிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்துவார்களா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது இந்தியாவுக்கு சற்று சவாலானதே. 6 போட்டியில் 4 ஆட்டத்தில் வென்றால் இந்திய அணி தரவரிசையில் முதல் இடத்தை பிடிக்கும்.

டெஸ்ட் தொடரில் விளையாடாத முன்னாள் கேப்டன் டோனி, மனீஷ் பாண்டே, கேதர்ஜாதவ், யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், ஷிரேயாஸ் அய்யர், அக்சர் பட்டேல், ‌ஷர்துல் தாகூர் ஆகியோர் ஒருநாள் போட்டியில் ஆடுகிறார்கள். முரளிவிஜய், அஸ்வின், ஜடேஜா, இஷாந்த்சர்மா, பார்த்தீவ் பட்டேல், புஜாரா, ராகுல், உமேஷ்யாதவ் ஆகியோர் நாடு திரும்புகிறார்கள். தவானும், ரோகித் சர்மாவும் தொடக்க வீரர்களாக ஆடுவார்கள். கோலி 3-வது வீரர் வரிசையில் வருகிறார். மிடில் ஆர்டரில் மனீஷ் பாண்டே, கேதர்ஜாதவ், ஷிரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.

கூடுதல் பலமே

3-வது டெஸ்டில் ரகானே சிறப்பாக ஆடினார். இதனால் அவர் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறலாம். ஒருவேளை அவர் நீக்கப்பட்டால் 4 பேரில் இருவர் இடம் பெறுவார்கள். 3 வேகப்பந்து வீரர்களும், ஒரு சுழற்பந்து வீரரும் ஆடுவார்கள். வேகப்பந்தில் புவனேஷ்வர்குமார், பும்ரா, முகமது சமியும், சுழற்பந்தில் சஹாலும் இடம் பெறுவர். ஹர்த்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டர் வரிசையில் உள்ளார். டெஸ்ட் தொடரை வென்றது போல் ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் ஆர்வத்தில் தென்ஆப்பிரிக்கா இருக்கிறது. சொந்த மண்ணில் விளையாடுவது அந்த அணிக்கு கூடுதல் பலமே.

சொந்த மண்ணில்...

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் 3 போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மாற்று வீரர் இடம் பெறவில்லை. டிவில்லியர்ஸ் இல்லாததை இந்தியா சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இந்திய அணி கடைசியாக இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை சொந்த மண்ணில் கைப்பற்றி இருந்தது. தென்ஆப்பிரிக்கா அணி கடைசியாக சொந்த மண்ணில் வங்காளதேசத்தை வீழ்த்தி இருந்தது.

வீரர்கள்

இன்றய ஆட்டம் பகல்- இரவாக நடக்கிறது. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் சோனி டென் டெலிவிசனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்தியா: வீராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர்ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, அக்‌ஷர் பட்டேல், ‌ஷர்துல் தாக்கூர். தென்ஆப்பிரிக்கா: டுபெலிசிஸ் (கேப்டன்), ஹசிம் அம்லா, குயின்டன் டிகாக், டுமினி, மார்கிராம், டேவிட் மில்லர், மார்னே மார்கல், இம்ரான் தாகீர், கிறிஸ் மோரிஸ், ரபடா, நிகிடி, தபரிஷ் சம்ஷி, ஜோன்டோ, பெகுல்வாயோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து