முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் தொழில்கல்வி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தமிழகத்தில் தொழில்கல்வி படிக்கும் ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

பயனாளிகளின்...

2003-ம் ஆண்டு, தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்களுக்கு அவர்களின் படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு வருடமும் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் காலத்தில் ஒருமுறை மட்டும் தலா ரூ.25,000 வழங்கவும், அதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்பட்டது. பிறகு இப்பயனாளிகளின் எண்ணிக்கையை 100-லிருந்து 200-ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டது.

வருமான உச்சவரம்பு...

மேலும், 2015-16 ஆம் கல்வியாண்டு முதல் தொழிற் கல்வி பயிலுவதற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதி உதவி மூலம், கல்வி உதவி வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடைய மாணவர்களின் பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.50,000-லிருந்து ரூ.72,000- ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

நிதியுதவி உயர்வு

தொழிற்கல்வி பயிலும் ஏழை மாணவர்கள் தங்களது படிப்பினை தொடர முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கும் திட்டத்தில் பயன்பெறும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது இந்நிவாரணநிதியிலிருந்து வழங்கப்படும் நிதியுதவி தொகையான ரூ.25,000-ஐ முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.50,000- ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளார்.

அத்துடன், முதல் பட்டதாரி சலுகை பெற்றிருப்பினும், தொழிற்கல்வி பயில இயலாத மிகவும் வறிய நிலையில் உள்ளவர்களும் தொழிற்கல்வி உதவித்தொகை பெற்றிட, மாவட்ட ஆட்சியரால் பரிந்துரைக்கப்பட்டு சிறப்பினமாக கருதப்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்து, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தொழிற்கல்வி உதவித்தொகை வழங்கவும், இந்த அரசாணை மூலம் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து