முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் இன்று தாக்கல்: புதிய அறிவிப்புகள் வெளியாகும்?

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : இன்று 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் செய்யப்பட உள்ளது. பா.ஜ.க.வின் கடைசி பட்ஜெட் என்பதால் புதிய சலுகைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அருண்ஜெட்லி....

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கியது. அன்று பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். பாராளுமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது. 2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

கடைசி பட்ஜெட்...

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு இது கடைசி பட்ஜெட்டாகும். எனவே இந்த பட்ஜெட்டில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல கவர்ச்சி கரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தனி நபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பு உயர்த்தப்படும் என்று தெரிய வந்துள்ளது. தற்போது வருமான வரி விலக்கு உச்சவரம்பு 2.5 லட்சம் ரூபாயாக உள்ளது. இது ரூ.3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு....

கடந்த சில மாதங்களாக வணிகர்கள் ஜி.எஸ்.டி.யால் கடும் அவதிப்பட்டனர். எனவே விவசாயிகளுக்கு சலுகை அளிக்கும் அறிவிப்பு வரும் என்று தெரிகிறது. விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. விவசாயிகளுக்கு உதவும் வகையில் சில சலுகைகளை அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிறு குறு தொழில்களுக்கும் சலுகைகள் அளிக்க அருண் ஜெட்லி முன் வந்துள்ளார். அதுபோல பொருளாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தும் அறிவிப்புகளும் வர உள்ளன. இவை வேலை வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும் வகையில் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து