முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நதிநீர் குறித்த தீர்ப்பு 5-ம் தேதி வெளியாகிறது

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு தொடர்பாக வரும் 5-ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாக இருப்பதால் கர்நாடகாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தண்ணீர் பற்றாக்குறை....

தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதியில் தற்போது சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவடை காலம் நெருங்கும் நிலையில் சம்பா பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரியில் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைந்து போனதால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சம்பா சாகுபடி பயிரிடப் பட்டிருந்த போது வடகிழக்கு பருவ மழை தீவிரம் காரணமாக பயிர்கள் அழிந்தன. இந்த நிலையில் மீண்டும் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நேரில் சந்திக்க முடிவு

இதையடுத்து டெல்டா மாவட்ட சம்பா பயிரைக் காப்பாற்ற 15 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விடுமாறு கர்நாடகா அரசை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வருகிறார். ஆனால் கர்நாடகா முதல்வர் சித்தராமைய்யா தண்ணீர் தரமறுத்து விட்டார். இதைத் தொடர்ந்து அவரை நேரில் சந்தித்து பேச முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இறுதித் தீர்ப்பு

இதற்கிடையே காவிரி நதிநீரை பிரித்துக் கொள்வது தொடர்பாக தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. 2007-ம் ஆண்டு காவிரி நீர் நடுவர் மன்றம் தமிழ்நாட்டுக்கு ஆண்டுதோறும் 419 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா திறந்து விட வேண்டும் என்று தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகா இரு மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மறு ஆய்வு மனு செய்தன. கடந்த 10 ஆண்டுகளாக இந்த அப்பீல் வழக்கு நடந்து வருகிறது. இரு மாநில வக்கீல்கள் வாதம் முடிந்து விட்டது. எனவே காவிரி நீர் பங்கீடு வழக்கில் வரும் 5-ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகும் என்று தெரிய வந்துள்ளது.

பாதுகாப்பு அதிகரிப்பு

காவிரி நதிநீர் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு எப்போது உத்தரவுகள் வெளியிட்டாலும் கர்நாடகாவில் வன்முறை நடத்தப்படுகிறது. தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. 2007-ல் கலவரம் ஏற்பட்ட போது ரூ.11 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டதற்காக பெங்களூரில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு கர்நாடகாவில் வரும் 5-ந்தேதி வன்முறை ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. மாண்டியா, மைசூர் மாவட்டங்களில் அதிக பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து