முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : உலகின் 6-வது பணக்கார நாடு இந்தியா என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்த சொத்து மதிப்பு 8,230 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

உலக பணக்கார நாடுகள் ஆய்வுப் பட்டியலை நியூ வோர்ல்ட் வெல்த் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது.தனிநபர் சொத்து, நிதி ஆதாரம், பங்குகள், நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சிக் கண்டுள்ளது. அதேவேளையில், இந்தியாவின் 67 சதவிகித சொத்து ஒரு சதவிகித இந்தியர்கள் வசமே உள்ளது என்பதும் அதிர்ச்சித் தகவல்.

முதலிடத்தில் அமெரிக்கா

இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவின்  மதிப்பு 64,854 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அடுத்த இடத்தை சீனா பிடிக்கிறது. சீனாவின் சொத்து 24,803 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. ஜப்பான் 19,522 பில்லியன் டாலர்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பிரிட்டன் 9,919 பில்லியன் டாலர்களுடன் 4-வது இடத்தைப் பெறுகிறது. ஜெர்மனி 9,660 பில்லியன் டாலர்களுடன் 5-வது இடத்தில் உள்ளது. பிரான்ஸ் இந்தியாவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாட்டின் சொத்து மதிப்பு 6,649 பில்லியன் டாலர்கள். அடுத்தடுத்த இடங்களை கனடா, ஆஸ்திரேலியா, இத்தாலி நாடுகள் பெற்றுள்ளன.

25 சதவிகிதம் வளர்ச்சி...

2017-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 25 சதவிகிதம் வளர்ச்சிக் கண்டுள்ளது. 2016-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 6,584 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. ஒரே ஆண்டில் 8,230 கோடியாக உயர்ந்துள்ளது. 2007-ம் ஆண்டு இந்தியாவின் சொத்து மதிப்பு 3,165 பில்லியன் டாலர்களாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 160 சதவிகிதம் வளர்ச்சி கண்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து