முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

150 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் தோன்றிய சூப்பர், புளு, பிளட் மூன்

புதன்கிழமை, 31 ஜனவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : முழு சந்திர கிரகணம் நேற்று நிகழ்ந்தது. அப்போது, நிலவு சூப்பர் நிலாவாக பெரிதாக தெரியும். அதோடு ப்ளூ மூன் மற்றும் பிளட் மூன் ஆகியவையும் நேற்று ஒன்று சேர நிழ்ந்தது அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் நேற்று ஏற்பட்டது. இது, இம்மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும். நேற்று மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்கி, இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடித்தது. பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடைந்தது.

இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், சிவந்த நிலாவாக தோன்றும். இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.

மூன்றாவது அரிய நிகழ்வு, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும். இந்த மூன்று நிகழ்வுகளும் நேற்று ஒரே நாளில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து