முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜஸ்தான் இடைத்தேர்தல் 3 இடங்களில் காங். வெற்றி

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களிலும் பா.ஜ.கவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், அல்வர் மக்களவைத் தொகுதிகளிலும், மண்டல்கர் சட்டசபை தொகுதியிலும் கடந்த திங்கள்கிழமையன்று இடைத்தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் 2 மக்களவை, ஒரு சட்டசபை என 3 இடங்களிலும் பா.ஜ.கவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பா.ஜ.க. எம்.பி.க்கான அஜ்மீர் தொகுதி சன்வர்லால் ஜேட், அல்வர் தொகுதி மஹந்த் சந்த் நாத் யோகி மற்றும் மண்டல்கர் தொகுதி எம்.எல்.ஏவான கீர்த்தி குமாரி (பா.ஜ.க) ஆகியோர் கடந்த ஆண்டு மரணம் அடைந்ததையடுத்து அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து