முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றம் ஏதுமில்லை

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள வருமான வரி தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வருமாறு:
தனி நபர் வருமான வரி ஆண்டு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இன்றி ரூ.2.5 லட்சமாகத் தொடரும். வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அளிக்கப்பட உள்ளது. அதே சமயம் வருமான வரியில் ஏமாற்றம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 250 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி தற்பொழுது உள்ள 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி வருவாய் உயர்ந்துள்ளது. மாத ஊதியம் பெறுபவர்களுக்கான நிரந்தர வரிக் கழிவு ரூ.40 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

மூத்த குடிமக்களுக்கு அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு. வைப்புத் தொகைகள் ஆகியவற்றில் இருந்து வரும் வட்டி வருவாயில் முன்பு ரூ.10 ஆயிரம் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  50 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயது வரையுள்ள மிக மூத்த குடிமக்கள் ஆகியோர் மருத்துவக் காப்பீட்டுக்குச் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து