முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பண மதிப்பிழப்பால் கருப்பு பணம் ஒழிப்பு அருண் ஜெட்லி விளக்கம்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக கருப்புப் பணம் ஒழிந்திருப்பதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கூறினார்.

பட்ஜெட் உரையின் போது கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் நடந்த மாற்றங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி விளக்கி கூறினார்.

அதாவது, கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையால் வரி வருவாய் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் 41 சதவீதம் புதிதாக வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.90 ஆயிரம் கோடி கூடுதல் வருமான வரி கிடைத்துள்ளது. வரி ஏய்ப்பு செய்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து