மலேசியாவில் தைப்பூச திருவிழா கோலாகல கொண்டாட்டம்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      ஆன்மிகம்
Malaysia thaipoosam 2018 02 01

கொலாம்பூர், மலேசியாவில் வசிக்கும் இந்துக்கள்  தைப்பூச திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர்.

பார்வதி தேவி, தீய சக்திகளுடன் போரிடுவதற்காக சக்தி வாய்ந்த வேலினை, தனது மகன் முருகனுக்கு வழங்கிய தினம் தைப்பூசமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

மலேசியாவின் பட்டு கேவ்ஸ் பகுதியில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூசம் திருவிழா கொண்டாடப்பட்டது. குன்றின் மீதுள்ள கோயிலுக்கு நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடம் ஏந்தியும், அலகு குத்திக் கொண்டும், காவடி எடுத்தபடியும் சென்று முருகனை வழிபட்டனர். இக்கோயிலில் 141 அடி உயர முருகன் சிலை உள்ளது. இது உலகிலேயே உயரமான சாமி சலையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து