சேக்கிழார் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட உபகழிவு நீரேற்று நிலையத்தினை ஆணையாளர் ஆனீஷ்சேகர் ஆய்வு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      மதுரை
mdu corparation -1 2 18

மதுரை.- மதுரை மாநகராட்சி பகுதிகளில் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   திடீர் ஆய்வு மேற் கொண்டார்.
மதுரை மாநகராட்சி வைகை ஆற்றுப் பகுதியான செல்லூர் முதல் ராஜா மில் ரோடு, ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளிலும், மண்டலம் எண்.1 க்கு உட்பட்ட தத்தனேரி மயானம், ஆனையூர் மயானம், சிலையனேரி மயானம் ஆகிய மயானங்களிலும் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தடுப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். ஆனையூர் மயானத்திற்கு அருகில் உள்ள குடியிருப்புகளில்வசிப்பவர்களிடம் திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்த்து பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளை பயன்படுத்துமாறு கூறினார்.  வைகை ஆற்று செல்லூர் பகுதியில் ஆய்வு செய்த போது அப்பகுதியில் இருந்த சிறுவர்களிடம் வீடுகளில் கழிப்பறை உள்ளதா என்றும், திறந்த வெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துவதை தவிர்த்து கழிப்பறைகளை மட்டும் பயன்படுத்துமாறு அறிவுரை கூறினார்.
மேலும் சிலையனேரி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு  பகுதியில் உள்ள பொதுமக்கள் அங்குள்ள மழைநீர் வாய்க்காலில் தண்ணீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக அவ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டு மழைநீர் வடிகாலினை சுத்தப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து வார்டு எண்.5 பாக்கியநாதபுரம் மெயின் ரோடு, ராஜீவ் காந்தி தெரு, முனியாண்டி கோவில் தெரு ஆகிய பகுதிகளில் ரூ.43.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள பேவர் பிளாக் மற்றும் தார் சாலை பணியினையும், பீ.பீ.குளம் சேக்கிழார் தெருவில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட உபகழிவு நீரேற்று நிலையத்தினையும், வார்டு எண்.6 குலமங்கலம் மெயின் ரோடு கல்யாண சுந்தரபுரம் 1 முதல் 10 வரை உள்ள தெருக்களில் ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப் பட்டுள்ள தார் சாலை பணியினையும் என மொத்தம் ரூ.1.29 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளையும் ஆணையாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது உதவி ஆணையாளர்  அரசு, உதவி நகர்நல அலுவலர்  பார்த்திப்பன், உதவி செயற்பொறியாளர்  முருகேசபாண்டியன், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், உதவி பொறியாளர்  பாஸ்கரன், சுகாதார அலுவலர்  விஜயகுமார், சுகாதாரஆய்வாளர்கள்;  ராஜாமணி குமார்,  நாகராஜ் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து