முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ75,000 கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க அரசு தேர்வு செய்யப்பட்டது. ஜி.எஸ்.டி வரி விதிப்புக்கு பிறகு, தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் இதில் ஏராளமான எதிர்பார்ப்புகள் இருந்தன.

இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். கிராமப்புற மக்களை குறிவைத்தே இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கிராமப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் மூலம் கிராமப்புற பெண்கள் பெரும்பாலும் பயனடைவர்.

சத்தீஸ்கர், கர்நாடகம், மத்திய பிரதேசம். மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான் மற்றும் திரிபுரா ஆகிய 8 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் இந்த ஆண்டு நடைபெறவுள்ளன. இதனை கருத்தில் கொண்டே மோடி அரசு இந்த பட்ஜெட்டை தயாரித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கிராமப்புற மற்றும் விவசாயிகளை குறிவைத்தே நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட மாநிலங்களில் பெரும்பாலும் மலைபிரதேசம் மற்றும் பழங்குடியினர் வாழும் மாநிலங்களாகும். இந்த மாநில மக்களை கவரும் வகையில் இலவச கேஸ் திட்டம், சுயஉதவி குழுக்களுக்கான நிதி ஒதுக்கீடு என ஓட்டுக்களை வாங்குவதற்காகவே போடப்பட்ட பட்ஜெட் இதுவாகும். சாமானிய மக்கள் பயன்பெறும் திட்டங்கள் ஏதும் இந்த பட்ஜெட்டில் இல்லை என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து