ஜெ.ஆர்.சி பொறுப்பாசிரியர்களுக்கு முதலுதவி பயிற்சி முகாம்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
first aid  1 2 18

  பரமக்குடி - பரமக்குடி கல்வி மாவட்ட அளவிலான ஜெ.ஆர்.சி பொறுப்பாசியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் பரமக்குடி ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமில் எழும்பு முறிவு,தீக்காயம்,சுட்டபுண்,வெந்தபுண்,நஞ்சு, மாரடைப்பு போன்ற வற்றிக்கான முதலுதவி செய்முறையோடு பவர்பாயிண்ட் மூலம் மாநில முதலுதவி பயிற்றுநர் அலெக்ஸ் வழங்கினார்.மேலும் கைவினைப்பொருள்கள் செய்வது பற்றி மாவட்ட பயிற்றுநர் செல்வக்குமார் விளக்கினார்.                                கன்வீனர் அலெக்ஸ் வரவேற்புரையும், மாவட்ட கல்வி அலுவலர் அண்ணாமலை ரஞ்சன் தலைமையுரையாற்றினார்.இந்தியன் ரெட்கிராஸ் இராமநாதபுரம் கிளை சேர்மன் ஹாருன் முன்னிலை வகித்தார்.கிளை செயலாளர் ராக்லண்ட் மதுரம் பரமக்குடி கல்வி மாவட்ட பள்ளி துணை ஆய்வாளர் லோகமுருகன்,ஜீனியர் ரெட் கிராஸ் துணை தலைவர் டாக்டர் இராமதாஸ்,துணை சேர்மன் சண்முகம், ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜஸ்டின் ஞானசேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.இந்நிகழ்ச்சியை இணைக் கன்வீனர் பெனடிக்ட் தொகுத்து வழங்கினார்.பொருளாளர் பெஞ்சமின் பிரபாகர் நன்றியுரை கூறினார்.இம்முகாமில் 110 கவுன்சிலர்கள் பயிற்சி பெற்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து