முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போல்நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை துவக்கம்:

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      மதுரை
Image Unavailable

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள போல்நாக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் ரூ.1லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை மாவட்ட தொடக்க கல்வி அலுவர் செ.ஜெயபால் தொடங்கி வைத்தார்.
திருமங்கலம் அருகேயுள்ள போல்நாயக்கன்பட்டி கிராமத்தில் சிறப்புடன் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் குழந்தைகளின் திறனை மேம்படுத்திடும் வகையில் பல்வேறு புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒருபகுதியாக கிராம மக்கள்,பள்ளி மேலாண்மைக்குழு,கிராமக் கல்விக்குழு மற்றும் இளைஞர்கள் ஒன்றுகூடி சேர்த்த ரூ.1லட்சம் செலவில் பள்ளியில் புதிதாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.அதன் மூலம் குழந்தைகள் தங்களது பாடங்களை எளிதில் புரிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து ஸ்மார்ட் வகுப்பறையின் திறப்பு விழாவில் மதுரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செ.ஜெயபால் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து பள்ளியின் ஸ்மார்ட் வகுப்பறையை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவில் உதவி தொடக்க கல்வி அலுவலர் பேபி,கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் சாந்தி,வட்டார வளமைய மேற்பார்வையாளர் தனலட்சுமி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உதயகுமார்,ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் பணியாளர்கள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை க.ரோஜா,உதவி ஆசிரியைகள் பா.சார்லட்,ஜோ.சு.அனிதா ஆகியோர் சிறப்புடன் செய்திருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து