முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவம் அளிக்கப்படும் என்றும், தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம் ஏதும் இல்லை என்றும் பாராளுமன்றத்தில் நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன், கார், சிகரெட், பர்னிச்சர்,  கை கடிகாரங்கள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2018-2019-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜெட்லி நேற்று பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். 1 மணிநேரம் 50 நிமிடங்கள் இந்த உரையை அவர் வாசித்தார். அதில் தெரிவித்திருப்பதாவது, தனி நபர் வருமான வரி ஆண்டு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் இன்றி ரூ.2.5 லட்சமாகத் தொடரும். வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முறையாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோரை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகள் அளிக்கப்பட உள்ளது. அதே சமயம் வருமான வரியில் ஏமாற்றம் செய்வோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

நிரந்தர வரிக் கழிவு...

பெரு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரி குறைக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ. 250 கோடி வரை வருமானம் உள்ள நிறுவனங்களுக்கான வரி தற்பொழுது உள்ள 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படுகிறது. தனிநபர் வருமான வரி வருவாய் உயர்ந்துள்ளது. மாத ஊதியம் பெறுபவர்களுக்கான நிரந்தர வரிக் கழிவு ரூ.40 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை அவர்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ரூ.10 ஆயிரம் வரிவிலக்கு...

மூத்த குடிமக்களுக்கு அஞ்சலக மற்றும் வங்கி சேமிப்பு. வைப்புத் தொகைகள் ஆகியவற்றில் இருந்து வரும் வட்டி வருவாயில் முன்பு ரூ.10 ஆயிரம் வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது. அது தற்பொழுது ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  50 வயது வரை உள்ள மூத்த குடிமக்கள் மற்றும் 80 வயது வரையுள்ள மிக மூத்த குடிமக்கள் ஆகியோர் மருத்துவக் காப்பீட்டுக்குச் செலுத்தும் பிரீமியம் தொகைக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் வரை...

10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும். ஏழை குடும்பங்களுக்கு புதிய இலவச மருத்துவ வசதி திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். ஒரே நேரத்தில் 10 கோடி குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு என்பது உலகிலேயே மிகப்பெரியது.

மத்திய அரசின் இந்த இலவச மருத்துவ சிகிச்சை திட்டத்தினால், நாட்டில் உள்ள 50 கோடி மக்கள் பயனடைவார்கள். காசநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 வழங்கப்படும்.  காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்குவதற்கு ரூ.600 கோடி ஒதுக்கீடு. சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுமுறை 26 வாரங்களாக அதிகரிப்பு. இவ்வாறு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1 லட்சம் கோடி நிதி

அடுத்த 4 ஆண்டுகளில் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு,

ஆசிரியர்களுக்கு பயிற்சியளிக்க ஏதுவாக மத்திய அரசு சட்ட திருத்தம் மேற்கொண்டுள்ளது. பழங்குடியினர் குழந்தைகளின் கல்விக்கு என ஏகலைவா திட்டத்தின் கீழ் பள்ளிகள் தொடங்கப்படும்.

கல்வி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.

பி.டெக் மாணவர்கள் 1000ம் பேர் தேர்வு செய்யப்பட்டு பி.எச்.டி படிக்க உதவி செய்யப்படும்.

குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும். பள்ளிகளில் கரும்பலகைக்கு மாற்றாக டிஜிட்டல் போர்டுகள் வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

சுங்க வரி அதிகரிப்பு....

நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சில பொருட்களின் மீது வரி விதிப்பு மற்றும் சுங்க கட்டணங்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, மொபைல் போன்களின் சுங்க வரி 15% முதல் 20% வரை அதிகரித்துள்ளது. கல்வி செஸ் 3% முதல் 4% வரை அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி சம்பளம் உயர்வு

நாட்டின் ஜனாதிபதி மற்றும் ஆளுநரின் சம்பளம் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, ஜனாதிபதியின் சம்பளம் ரூபாய் 5 லட்சமாகவும், குடியரசு துணைத் தலைவரின் சம்பளம் ரூபாய் 4 லட்சமாகவும் உயர்த்தப்படுகிறது. மேலும், ஆளுநரின் சம்பளம் 3.5 லட்சம் ஆக உயர்த்தப்படுகிறது.  இவ்வாறு பட்ஜெட்டில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

வருமான வரி விவரம்:

2.5 லட்சம் வரை வரியில்லை.

2.5-5 லட்சம் வரை 5% வரி.

5-10 லட்சம் வரை 20% வரி.

10 லட்சத்துக்கு மேல் 30% வரி.

வரி செலுத்தினால் விருது

’வரி ஏய்ப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. 85.51 லட்சம் பேர் புதிதாக வருமான வரித் தாக்கல் செய்துள்ளனர். நேர்மையாக வரி செலுத்தும் நபர்களுக்கு விருதும் பரிசும் வழங்கப்படும்’ என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து