அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் லாரிகளிலிருந்து பேட்டரிகளை திருடிய 2 பேர் கைது

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      சென்னை

கடந்த 29.01.2018 அன்று சென்னை, அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அம்பத்தூர் வாவின் சாலையிலுள்ள லாரி நிறுத்துமிடத்தில் நிறுத்தியிருந்த தனது லாரியின் பேட்டரியை யாரோ திருடிச் சென்றுவிட்டதாக, லாரியின் உரிமையாளர் ராயப்பன், என்பவர் அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

சாதாரண உடை

 மேலும், இது போன்று மேற்படி இடத்தில் நிறுத்தியிருக்கும் லாரிகளிலிருந்தும் பேட்டரிகளை யாரோ திருடிச் செல்வதாக கிடைத்த தகவலின்பேரில், அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படையினர் அப்பகுதியில் சாதாரண உடையில் கண்காணித்து வந்தபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 பேரை அழைத்து விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.

அதன்பேரில், அவர்களை மேலும் விசாரணை செய்தபோது, பிடிபட்ட நபர்கள் ஜீவன் () ஜீவா, /20, /பெ.ராஜா, எண்.10, இருளர் காலனி, 2வது தெரு, கீழ்அயனம்பாக்கம், சென்னை-95 மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த 17வயது இளஞ்சிறார் என்பதும், இருவரும் சேர்ந்து மேற்படி லாரிகள் நிறுத்துமிடத்தில் இருக்கும் லாரிகளின் பேட்டரிகளை திருடியது தெரியவந்தது. மேலும், விசாரணையில் இவர்கள் இது போல லாரிகளிலிருந்து 22 பேட்டரிகளை திருடியது தெரியவந்தது.

அதன்பேரில், குற்றவாளிகள் இருவரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 10 பேட்டரிகள் மற்றும் பணம் ரூ.48,000/- ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி ஜீவன் () ஜீவா சிறையில் அடைக்கப்பட்டார். இளஞ்சிறார், நீதிமன்ற உத்தரவுப்படி அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து