தி.மலையில் மனிதநேர வார நிறைவுவிழா 170 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

வியாழக்கிழமை, 1 பெப்ரவரி 2018      திருவண்ணாமலை

 

திருவண்ணாமலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நேற்று நடைபெற்ற மாநில அளவிலான மனிதநேர வார நிறைவு விழாவில் 170 பயனாளிகளுக்கு ரூ. 1.44 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வி.எம்.ராஜலட்சுமி, சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் வழங்கினர். திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்கார வேலு திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக மாநில அளவிலான மனிதநேய வார நிறைவுவிழா நேற்று நடைபெறவுள்ளது.

நலத்திட்ட உதவி

இவ்விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். சட்டமன்ற உறுப்பினர்கள் கு.பிச்சாண்டி, தூசி கே.மோகன், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் க.வீ.முரளிதரன், ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தெ.ராஜஸ்ரீ அனைவரையும் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.இராஜலட்சுமி கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கி விழா பேருரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளும் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆதிதிராவிடர் நலத்துறை , பழங்குடியினர் நலத்துறை, தாட்கோ ஆகிய துறைகளின் சார்பில் 170 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் பொ.ரத்தினசாமி, அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நளினி மனோகரன், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் எம்.எஸ்.நைனாகண்ணு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் க.லோகநாயகி, உதவி இயக்குநர் (கலால்) தண்டாயுதபாணி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.ஜானகி, செய்யாறு கோட்டாட்சியர் பொ.கிருபானந்தம், தாட்கோ மாவட்ட மேலாளர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஜி.சிதம்பரம், சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு காவல்துறை துணை கண்காணிப்பாளர் அ.ரவி, தலைமை ஆசிரியர் பெர்னாண்டஸ், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலக்குழு உறுப்பினர் நடுப்பட்டு க.ரவி, தமிழக ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் நலச்சங்க தி.மலை வட்டக்கிளை தலைவர் ஜெ.ஜான்பாப்பிஸ்ட், செயலாளர் ஏ.சிவக்குமார், பொருளாளர் சி.மூர்த்தி, செங்கம் வட்டக்கிளை தலைவர் அ.ராமகிருஷ்ணன், செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் எஸ்.ஆறுமுகம், நகர கழக செயலாளர் ஜெ.எஸ். (எ) செல்வம், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் என்.சேதுராமன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள், வன்கொடுமை தடுப்புச் சட்டம் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள் துப்புரவு பணியாளர் கண்காணிப்பு மற்றும் மறுவாழ்வுக்கான மாவட்ட அளவிலான குழு உறுப்பினர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உறுப்பினர்கள், விடுதி காப்பாளினிகள், காப்பாளர்கள் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

முன்னதாக இவ்விழாவையட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து துறை கண்காட்சி அரங்குகளை அமைச்சர்கள் வி.எம்.இரராஜலட்சுமி, சேவூர் எஸ்.இராமச்சந்திரன் ஆகியோர் திறந்துவைத்து அரங்குகளை பார்வையிட்டனர். முடிவில் மாவட்ட பழங்குடியினர் நல திட்ட இயக்குநர் ப.சுப்ரமணியன் நன்றி கூறினார்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து