முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து: 11 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ: ஜப்பானில் முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் பலியாகினர்.
இதுகுறித்து ஜப்பான் போலீஸார் தரப்பில் கூறியதாவது,

ஜப்பானின் வடக்குப் பகுதியிலுள்ள சாப்போரா நகரத்திலுள்ள மூன்று அடுக்குமாடி விடுதியில் நேற்று  ஏற்பட்ட தீ விபத்தில் அவ்விடுதியில் தங்கியிருந்த 11 பேர் பலியாகினர்.

பலியானவர்களில் 8 பேர் ஆண்கள். 3 பேர் பெண்கள். 5 பேர் இந்த தீவிபத்திலிருந்து தப்பித்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் ஜப்பான் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து