முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் உலகப்போரில் வீசப்பட்ட 1000 பவுண்டு வெடிகுண்டு ஹாங்காங்கிலிருந்து அகற்றம்

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      உலகம்
Image Unavailable

ஹாங்காங்: இரண்டாம் உலகப்போரில் பல உலக நாடுகள் குழுவாக பிரிந்து மோதின. இதில் பல குண்டுகள் இன்னும் பூமிக்கு அடியில் இருக்கிறது. அப்போது போடப்பட்டு செயல் இழந்த வெடிகுண்டு ஒன்று இப்போது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. ஹாங்காங்கில் இந்த வெடிகுண்டு எடுக்கப்பட்டு உள்ளது.

இதன் எடை 1000 பவுண்ட் ஆகும். மிகவும் அபாயகரமான இந்த குண்டு எதோ ஒரு காரணத்தால் வெடிக்காமல் போய் இருக்கிறது. இதனால் பூமிக்கு அடியில் அப்படியே புதைந்து 60 வருடமாக இருந்துள்ளது.  அப்போது ஹாங்காங்கில் ஜப்பான் ராணுவ வீரர்கள் இருந்துள்ளனர். அவர்களை தாக்க அமெரிக்க இந்த குண்டை போட்டு இருக்கிறது. இது அமெரிக்க ராணுவத்தால் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டாகும்.  அங்கு இருக்கும் கட்டிடம் கட்டும் நிறுவனம் ஒன்று இதை கண்டுபிடித்துள்ளது. கட்டிடம் கட்ட குழி தோண்டிய போது இது கிடைத்துள்ளது.

இதை 40 பணியாளர்கள் 3 நாட்களாக மெதுவாக எடுத்துள்ளனர்.  ஏற்கனவே அங்கு இதேபோல ஒரு குண்டு எடுக்கப்பட்டது. இன்னும் அங்கு நிறைய குண்டுகள் இருக்க வாய்ப்புள்ள்ளது. இவை அனைத்தையும் ஒன்று ஒன்றாக தனியாக எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து