முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய பட்ஜெட் போட்ட கணவருக்கு மனைவி போட்ட மார்க் என்ன தெரியுமா..?

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டிற்கு அவருடைய மனைவி சங்கீதா ஜெட்லி 10- க்கு 9 மதிப்பெண் கொடுத்திருக்கிறார். மனித பிழை இருப்பதால் முழு மதிப்பெண் கொடுக்கவில்லை என்று சங்கீதா ஜெட்லி கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை  மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். அருண்ஜெட்லியின் அறிவிப்புகளை எதிர்பார்த்து நாட்டு மக்களே காத்திருந்தது போல அவருடைய குடும்பத்தாரும் அருண்ஜெட்லியின் பட்ஜெட் உரையை காண நாடாளுமன்றம் வந்திருந்தனர். அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா ஜெட்லி, மகன் ரோகன் ஜெட்லி, அருண் ஜெட்லியின் சகோதரி மது பார்கவா உள்ளிட்டோர் நாடாளுமன்றம் வந்திருந்தனர். பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்தவாறு அருண்ஜெட்லியின் சுமார் 2 மணி நேர பட்ஜெட் உரையை கேட்டனர். பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கீதா ஜெட்லி,
என்னுடைய கணவர் தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு 10-க்கு 9 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். இதில் சில மனித தவறுகள் நடந்திருப்பதால் 10-க்கு 10 மதிப்பெண் அளிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பட்ஜெட்டை காங்கிரஸ் குறை கூறியிருப்பதாக செய்தியாளர்கள் கேட்டதற்கு எதிர்க்கட்சிகளின் வேலையே குற்றங்களை கண்டுபிடிப்பது தான் என்றார். இதனைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டுக்கு ஜெட்லியின் சகோதரி மது பார்கவா 10-க்கு 10 மதிப்பெண் அளிப்பதாக தெரிவித்தார். பட்ஜெட் அனைவரையும் திருப்திபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக பார்கவா கூறினார். இதே போன்று அருண்ஜெட்லியின் மகனும் தந்தையின் பட்ஜெட்டிற்கு முதல் மார்க் கொடுத்துள்ளார். ஜெட்லியின் மகன் ரோகன் ஜெட்லி இது எதிர்காலத்துக்கான சிறந்த பட்ஜெட் என்று கூறினார். ஆனால் நாட்டு மக்கள் என்ன மார்க் கொடுத்தார்களோ தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து