மதுரை மாநகராட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகள் ஆணையாளர் அனீஷ் சேகர் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      மதுரை
mdu corparation 2 2 18

மதுரை - மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை சுற்றுச்சூழல் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மராமத்து பணிகளை ஆணையாளர் மரு.அனீஷ் சேகர்,   ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் அம்ரூட் திட்டத்தின் கீழ் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் பழமையான இரும்புதூண்களால் பாரம்பரியத்தை காக்கும் வகையில் சுற்றுச்சுவர் கட்டுதல், புல் தரை அமைத்தல், பூச்செடிகள் வைத்தல், நடைபாதை அமைத்தல், உட்காரும் இருக்கைகள் அமைத்தல், மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளும், ரூ.9.2லட்சம் மதிப்பீட்டில் இசை நீருற்று புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை ஆணையாளர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவில் முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்டார். மேலும் சுற்றுச்சூழல் பூங்காவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் கூடத்தினையும், மற்றும் மண்புழு  உரம் தயாரிக்கும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
இந்த ஆய்வின்போது செயற்பொறியாளர்  ராஜேந்திரன், உதவி செயற்பொறியாளர் அலெக் சாண்டர், மக்கள் தொடர்பு அலுவலர்  சித்திரவேல், சுகாதார அலுவலர்  .சிவசுப்பிரமணியன் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து