எரியோடு பேரூராட்சியில் மின்மயானம் அமைக்க பூமி பூஜை பரமசிவம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்.

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      திண்டுக்கல்
Paramasivam  MLA -2 2 18

வேடசந்தூர் - வேடசந்தூர் ஒன்றியம் எரியோடு பேரூராட்சியில் மின்மயானம் அமைக்க பூமிபூஜையை பரமசிவம் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணையின்படி தமிழகத்தில் பேரூராட்சிக்கு முதன்முதலாக ஆணையிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிக்கு நகர கழக செயலாளர் அறிவாளி தலைமை வகித்தார். ஒன்றிய கழக செயலாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 எரியோடு பேரூராட்சியில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் மின் மயானம் அமைக்க பூமிபூஜை போடப்பட்டது. அதேபோல் காவிரி கூட்டு குடிநீர் வீணாகி வெளியேறும் தண்ணீரை குடிநீராக மாற்ற ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தரைதொட்டி அமைத்திடவும், கழிப்பறை கட்டுதல் மற்றும் கழிப்பறையை புதுப்பித்தல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் தொடங்க பூமிபூஜை போடப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில் முன்னால் மாவட்ட கவுன்சிலர் பழனியம்மாள், முன்னால் ஒன்றிய துணைத்தலைவர் தண்டபாணி, நாடார் உறவின்முறை தலைவர் தனுஸ்கோடி, ஊர் முக்கியஸ்தர்கள் மாறன் முத்துச்சாமி, நாட்டாமை பழனியப்பன், வர்த்தக சங்கத்தலைவர் பால்ராஜ், அதிமுக நிர்வாகிகள் ரமேஸ்பாண்டி, பாலகுரு, போசப்பன், மாரியப்பன், அப்புக்கண்ணு, முன்னாள் கவுன்சிலர்கள் பெருமாள், தவமணி, தங்கராஜ், நடராஜன், கல்யாணி, தங்கராஜ், கூட்டுறவு சங்கத் துணைத்தலைவர் குணசேகரன் கழக நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து