பாம்பன் ரயில் பாலத்தில் ஆள் இல்லா விமானம் மூலம் பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு.

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      ராமநாதபுரம்
pamban palam 2 2 18

 ராமேஸ்வரம்,-: ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் பகுதியையும் ராமேசுவரம் தீவையும் இணைக்கும் வகையில் பாம்பன் கடலில்  2.5 கி.மீ தொலை தூரத்தில்  100 ஆண்டுகளுக்கு முன்பு  அமைக்கப்பட்டது.இந்த பாம்பன் ரயில் பாலத்தை மேம்படுத்துவது  தொடர்பாகவும்,பாலத்தில்
கப்பல் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் அமைந்துள்ள தூக்கு பாலத்தை மாற்றி அதி நவீனமுறையில் மாற்றவும்ரயில்வே நிர்வாகம் பலவேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக பாலத்தில்பாலத்தின் உறுதி தன்மை குறித்து ஆய்வு ஆள் இல்லா விமானம் மூலம் நேற்று நடைபெற்றது.
 நாட்டின் புனித ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வரும் ராமேஸ்வரம் மற்றும் 1964-ம் ஆண்டு வரை சிறந்த துறைமுக நகரமாக விளங்கிய தனுஷ்கோடியை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் பாம்பன் கடல் மீது ரயில் பாலம் அமைக்கப்பட்டது. கடந்த 1914-ம் ஆண்டு முதல் ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட இந்தப் பாலம் 100 வருடங்களைக் கடந்தும் கம்பீரமாக இயங்கிவருகிறது. 146 தூண்கள் மூலம் 145 கர்டர்களைக் கொண்டு இணைக்கப்பட்டுள்ள இந்தப் பாலத்தின் வழியாகக் கப்பல்கள் செல்லும் வகையில் 'ஹெர்சர் தூக்குப் பாலம்' உள்ளது. முழுதும் மனித சக்தியைக்கொண்டே திறக்கப்பட்டு கப்பல்கள் செல்ல வழி விடப்படுகிறது. இந்நிலையில் இந்த ஹெர்சர் பாலத்துக்குப் பதிலாக இயந்திரம் மூலம் இயங்கக்கூடிய புதிய பாலத்தை அமைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கென ரூ.35 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது.
 இந்நிலையில், ரயில் போக்குவரத்து மேம்பாட்டு அமைப்பின் சார்பில் பாம்பன் ரயில் பாலத்தின் உறுதித்தன்மை மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கான ஆய்வை சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் இன்று மேற்கொண்டது. இந்த ஆய்வின் அறிக்கையை தனியார் நிறுவனம் ரயில்வேதுறைக்கு அளித்த பின்பு மத்திய அரசு தூக்கு பாலத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து