சசிகலா குடும்பத்தை மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை: அமைச்சர் ஜெயக்குமார்

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      தமிழகம்
jayakumar(N)

சென்னை: சசிகலா குடும்பதை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்க வாய்ப்பில்லை என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டி.டி.வி தினகரன் டெல்லி போலீசாரால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரை கட்சியிலிருந்து நீக்குவதாக அறிவித்தனர்.

சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை. சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்த முடிவில் இருந்து பின் வாங்கப் போவதில்லை. முன்வைத்த காலை பின் வைக்க போவதில்லை. 
- அமைச்சர் ஜெயக்குமார்

இதைத்தொடர்ந்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மற்றும் ஓ.பி.எஸ் அணியினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார்.


அப்போது சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்க்க வாய்ப்பே இல்லை என அவர் கூறினார்.

சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்த முடிவில் இருந்து பின் வாங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். முன்வைத்த காலை பின் வைக்க போவதில்லை என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை 5 லட்ச ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களுக்கான சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது, போக்குவரத்து கழகத்தின் நிர்வாக முடிவு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து