முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கிக்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகைக்கான ரூ 4.01 கோடி நிதி : நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா 2016-17 திட்டத்தின் கீழ் ராபி ஐஐ நெல் பயிருக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தினரால் வழங்கப்பட்டு வருகிறது.

தஞ்சை மாவட்டத்திற்கு ரூ 251.758 கோடி அனுமதிக்ப்பட்டு, இதுவரை கூட்டுறவு வங்கிகள் மூலம் 67,392 விவசாயிகளுக்கு 171.03 கோடி ரூபாய் விவசாயிகளின் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. நேரடியாக வேளாண் துறை மூலம் பிரிமியம் செலுத்திய விவசாயிகள் 16,992 நபர்களுக்கு ரூ 61.54 கோடி அவர்களது சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பிரிமியம் செலுத்திய 879 விவசாயிகளுக்கு ரூ4.46 கோடி அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு

இதுவரை தஞ்சை மாவட்டத்தில் 85,263 விவசாயிகளுக்கு ரூ 237.03 கோடி பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பட்டியல் பெறப்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி , சேதுபாவசத்திரம் மற்றும் மதுக்கூர் ஆகிய வட்டாரத்ததை சேர்ந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெற்ற 989 விவசாயிகளுக்கு ரூ 4.01 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பயிர்காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வரவேண்டிய மீதமுள்ள தொகையினையும் பெற்று பயிர் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் வழங்கிட மாவட்ட நிர்வாகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து