ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில முடிவு

வெள்ளிக்கிழமை, 2 பெப்ரவரி 2018      தமிழகம்
jayalalitha 2017 10 30

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று நேற்று நடந்த அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில முடிவு எடுக்கப்பட்டது. மேலும், அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பது மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடாடுவது தொடர்பாக சென்னையில் அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் முதல்வர் இ.பி.எஸ். - துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.

மதுசூதனன் தலைமை...
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள கட்சித் தலைமைக்கழகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்திற்கு அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்கினார் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பிறந்த நாளை கொண்டாட...
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுசெயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 70 வது பிறந்தநாளை பிரம்மாண்டமான முறையில் கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்ப்பு பணி, புதுப்பி்க்கும் பணி ஆகியவற்றை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

பதிவை புதுப்பிப்பது....
இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான. ஓ. பன்னீர்செல்வம்; அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி. பழனிசாமி ஆகியோர் தலைமையில், தலைமைக் கழகத்தில் நேற்று மாலை தலைமைக் கழக நிர்வாகிகள், அமைச்சர்கள் , செய்தித் தொடர்பாளர்கள், மாவட்டக் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடுவது குறித்தும், கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், அ.தி.மு.க. உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை புதுப்பிப்பது மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டதாக அ.தி.மு.க. செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பங்கேற்ற அமைச்சர்கள் பிரமுகர்கள்
அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி. உதயகுமார், எம்.சி.சம்பத், பென்ஜமீன், டாக்டர் விஜயபாஸ்கர், ஜெயகுமார், கடம்பூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி, சரோஜா, செங்கோட்டையன், துரைக்கண்ணு, அனைத்துலக எம்.ஜிஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.பொன்னையன், செம்மலை, பா.வளர்மதி மற்றும் அ.தி.மு.க. எம்.பி.அன்வர்ராஜா , அண்ணா தொழிற்சங்கத்தலைவர் தாடி.ம.ராசு. ஆகியோர் கலந்து கொண்டனர்,

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து