தமிழகத்தில் இன்று 4 மணி நேரம் ரயில் புக்கிங் கிடையாது தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      தமிழகம்
train

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 4 மணி நேரம் ரயில்வே டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. கணிணி தகவல்களை சேகரிக்கும் பணி நடைபெற உள்ளதால் 4 மணி நேரம் சேவை பாதிக்கப்படும் என்றும் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ளுமாறும் தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் மதியம் 2.05 முதல் 3.45 மணி வரை டிக்கெட் கவுன்ட்டர்கள், இணையதளம் செயல்படாது என்று தெற்கு ரயில் கூறியுள்ளது. இதே போன்று இன்று இரவு 11.30 முதல் 1.45 மணி வரையும் இணையதளம் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது.

கணிணிகளிலுள்ள தகவல்களை சேமித்து வைக்கும் பணியால் இணையதள சேவை முடக்கப்படுகிறது. மேலும் கணிணி ஹேக்கர்களிடம் இருந்து தப்பிப்பதற்கான தொழில்நுட்ப அம்சங்களை கணிணியில் சேர்க்கும் பணி நடைபெறஉள்ளதால் சேவையில் பாதிப்பு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வெள்ளம் மற்றும் புயல் போன்ற பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பின் போது செய்யப்பட வேண்டியவை குறித்த கூடுதல் தகவல்களை கணிணியில் சேர்க்க வேண்டியுள்ளதால் இணையதள சேவை நிறுத்தி வைக்கப்பட உள்ளது என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. எனவே ரயில் பயணிகள் இந்த குறிப்பிட்ட காலத்தில் டிக்கெட் புக் செய்யாமல் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து