முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று 2-வது ஒருநாள் போட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றி தொடருமா?

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

செஞ்சூரியன்: இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நடக்கிறது. இந்திய அணியின் வெற்றி தொடரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தியா முன்னிலை...
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 6 ஆட்டம் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் நடந்து வருகிறது. டர்பனில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

2-வது ஒருநாள்...
இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று செஞ்சூரியனில் நடக்கிறது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பேட்டிங், பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அந்த உத்வேகத்தை தொடர இந்திய வீரர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

வெற்றிப்பெறும்...
கேப்டன் வீராட்கோலி, ரகானே ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். தொடக்க வீரர் ரோகித்சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஷிகார் தவான், டோனி, பாண்ட்யா, கேதர்ஜாதவ் ஆகியோரும் உள்ளனர்.

சுழற்பந்து கூட்டணியான குல்தீப் யாதவ், சஹால் அசத்தி வருகிறார்கள். முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை கட்டுப் படுத்தினர். வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர்குமார், பும்ரா, பாண்ட்யா உள்ளனர். இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் இந்தியா உள்ளது.

பின்னடைவு...
முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க தென்ஆப்பிரிக்கா முயலும். அந்த அணியில் கேப்டன் டுபெலிசிஸ் தவிர மற்ற வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் பேட்டிங்கை வலுப்படுத்த அந்த அணி முயற்சிக்கும். ஆனால் காயம் காரணமாக கேப்டன் டுபெலிசிஸ் விலகல் பெரும் பின்னடைவாக இருக்கும்.

இதுவரை 11 போட்டி...
இது இந்திய அணிக்கு சாதகமான வி‌ஷயமாகும். அந்த அணியில் ஹசிம் அம்லா, டிகாக், மார்கிராம், டுமினி, டேவிட் மில்லர் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். பந்துவீச்சில் மார்னே மார்கல், ரபடா, கிறிஸ் மோரிஸ், பெகுல்வாயோ ஆகியோர் உள்ளனர். 2-வது போட்டி நடைபெறும் செஞ்சூரியன் மைதானத்தில் இந்தியா இதுவரை 11 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறது. இதில் 4 போட்டியில் வெற்றி பெற்றது. 5 ஆட்டத்தில் தோற்றது. 2 போட்டி முடிவில்லை.

இந்திய அணி:
விராட்கோலி (கேப்டன்), ரோகித்சர்மா, தவான், கேதர்ஜாதவ், தினேஷ் கார்த்திக், மனிஷ் பாண்டே, ரகானே, ஹர்த்திக் பாண்ட்யா, யசுவேந்திர சஹால், குல்தீப் யாதவ், முகமது ‌ஷமி, புவனேஷ்வர்குமார், பும்ரா, அக்‌ஷர் பட்டேல், ‌ஷர்துல் தாக்கூர்.

தென்ஆப்பிரிக்க அணி:
ஹசிம் அம்லா, குயின்டன் டிகாக், டுமினி, மார்கிராம், டேவிட் மில்லர், பெஹர்டின், ஹென்ரிச் களாசென், மார்னே மார்கல், இம்ரான் தாகீர், கிறிஸ் மோரிஸ், ரபடா, நிகிடி, தபரிஷ் சம்ஷி, ஜோன்டோ, பெகுல்வாயோ.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து