49-வது நினைவு தினத்தை முன்னிட்டு அண்ணா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அஞ்சலி

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      தமிழகம்
OPS-EPS tribute anna memorial 2018 2 3

சென்னை : அண்ணாவின் 49-வது நினைவு தினத்தையொட்டி சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.கவினர் அஞ்சலி செலுத்தினர்.

மலர் வளையம் வைத்து...

அண்ணாவின் 49-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் ஆங்காங்கே அண்ணா சிலை மற்றும் அண்ணா படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 10.35 மணிக்கு முதல்வரும், துணை முதல்வரும் அண்ணா நினைவிடம் வந்தனர். முன்னதாக அமைச்சர்கள், அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் வந்திருந்தனர்.அண்ணா நினைவிடத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. நிர்வாகிகள்...

இந்த நிகழ்ச்சியில் அ. தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தமிழ் மகன் உசேன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், கே.ஏ. செங்கோட்டையன், செல்லூர் ராஜூ, பி.தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், ஓ.எஸ். மணியன், டாக்டர் விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, பெஞ்சமின் உள்ளிட்ட அமைச்சர்கள், அ.தி.மு.க. நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, பா.வளர்மதி, எஸ். கோகுல இந்திரா, செம்மலை எம்.எல்.ஏ., எம்.பிக்கள் எஸ்.ஆர். விஜயகுமார் ஜெயவர்த்தன் ஜே.சி.டி. பிரபாகர், ஆர்.எம்.டி. ரவீந்திர ஜெயன், எம்.எல்.ஏக்கள் விருகை வி.என்.ரவி எம்.எல்.ஏ., சிறுணியம் பலராமன், தி.நகர் சத்யா எம்.எல்.ஏ., வடசென்னை மாவட்ட ஜெ.,பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் முன்னாள் கவுன்சிலர்கள் டி.சிவராஜ், பி.சின்னையன், நடிகர் ஜெயகோவிந்தன், வழக்கறிஞர் ஆர்.சதாசிவம், ஏ.ஏ.அர்ஜூனன், ரமேஷ் உட்பட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து