முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பில் நாகலாபுரத்தில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு புதிய கட்டிடங்கள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடத்தை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். மேலும் , 4 மாவட்டங்களில் கல்வித்துறை கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.

76 புதிய கல்லூரிகள்....

தமிழ்நாடுஅரசு, கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வி கற்பதற்காக நகரங்களை நாடி செல்ல சிரமப்படாமல், அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே உயர்கல்வி கற்பதற்கு ஏதுவாக கடந்த ஆறரை ஆண்டுகளில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 56 அரசு, பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் 16 அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் என 76 அரசு புதிய கல்லூரிகள் துவக்கியுள்ளதோடு, அரசு கல்லூரிகளுக்கான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்தியுள்ளது. இதன் மூலம், மொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு மாநிலம் 46.9 சதவிகிதத்தைப் பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தில் உள்ளது.

தூத்துக்குடி - ராமநாதபுரம்...

தூத்துக்குடி மாவட்டம், நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடத்தை முதல்வர் .எடப்பாடி .பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். மேலும், இராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டிடம்.

நெல்லை - சிவகங்கை...

திருநெல்வேலி, அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல அலுவலகத்தில், 1 கோடியே 43 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்வியியல் கட்டிடம்; இராமநாதபுரம் மாவட்டம், புல்லங்குடியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிக்கு 2 கோடியே 54 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவ, மாணவியர் விடுதிக் கட்டிடங்கள்; சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழகத்தில் 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள யோகா மையம் மற்றும் 60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள்.

சென்னை - திருச்சி...

சென்னை, ராணி மேரி அரசு கல்லூரியில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கணினி அறிவியல் துறை கட்டிடம், சென்னை, அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி விரிவாக்க மையத்தில் 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடம், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டு அரங்கம்; திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 1 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மகளிர் விடுதிக் கட்டிடம் சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வைரவிழா கட்டிடம் என மொத்தம் 28 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர்கல்வித் துறை கட்டடங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்.சுனீல் பாலீவால், கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து