முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக்கோப்பை இந்தியா வெற்றி ஜனாதிபதி - பிரதமர் வாழ்த்து

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      விளையாட்டு
Image Unavailable

ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மற்றும் கும்ப்ளே, ரெய்னா உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “ சிறப்பாக விளையாடி இளம் வீரர்கள் மகத்தான வெற்றியை பெற்றுள்ளனர். இளம் வீரர்களின் வெற்றியை கண்டு நாடே பெருமை கொள்கிறது” என்று  தெரிவித்துள்ளார்.

இளையோர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்,இளைஞர்களுக்காக தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட டிராவிட்டுக்கே அனைத்து புகழும் சேரும் என சேவாக்  வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்திய ஜூனியர் அணிக்கு பாராட்டுவிழா நடத்தப்படும் என பிசிசிஐ தற்காலிக தலைவர் சி.கே கண்ணா  கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து