ஜூனியர் உலகக் கோப்பையை வென்று சாதனை: இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் பரிசுத்தொகை டிராவிட்டுக்கு ரூ.50 லட்சம் அறிவித்தது பி.சி.சி.ஐ

சனிக்கிழமை, 3 பெப்ரவரி 2018      விளையாட்டு
Spo - BCCI announces prize money 2018 01 03

மவுன்ட் மாங்கானு: நியூசிலாந்தில் நடந்த 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்குட்பட்டோர்) இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் இந்திய அணி வீரர்களுக்கு தலா ரூ.30 லட்சம் மற்றும் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு ரூ.50 லட்சம் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது பி.சி.சி.ஐ.

4-வது முறையாக...
மவுன்ட் மாங்கானுவில் இந்திய நேரப்படி நேற்று காலை 6:30 மணிக்குத் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் தேர்வு செய்த ஆஸ்திரேலிய அணிக்குத் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. சிறப்பாகப் பந்துவீசிய இந்திய அணி, 47.2 ஓவர்களில் 216 ரன்களில் ஆஸ்திரேலிய அணியை ஆட்டமிழக்கச் செய்தது. இதையடுத்து 217 ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

நிர்ணயித்த வெற்றி இலக்கை இந்திய அணி, 38.5 ஓவர்களில் எட்டியது. கல்ரா 101 ரன்களுடனும், அவருக்கு ஒத்துழைப்புக் கொடுத்த ஹர்விக் தேசாய் 47 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஆஸ்திரேலியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. ஜூனியர்  உலகக்கோப்பையை 4-வது முறையாக வென்று இந்திய கிரிக்கெட் அணி சாதனை படைத்துள்ளது.

டிராவிட்டே காரணம்...
ஜூனியர் அணியின் வெற்றிக்கு அதன் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டே காரணம். இதனால்  ஜூனியர் உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு  ரூ. 50 லட்சம் பரிசு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.

தலா.ரூ.30 லட்சம்...
மேலும் ஜூனியர் அணியில் உள்ள ஓவ்வொரு வீரருக்கும் தலா ரூ. 30 லட்சமும், ஊழியர்களுக்கு ரூ. 20 லட்சமும் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து